பொங்கி எழு மனோகராவுக்காக மாடுகளிடம் உதை வாங்கிய இர்பான்

Bookmark and Share

பொங்கி எழு மனோகராவுக்காக மாடுகளிடம் உதை வாங்கிய இர்பான்

இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர், சிங்கம்புலி நடிக்கும் பொங்கி எழு மனோகரா படம் வருகிற 30ந் தேதி ரிலீசாகிறது. சில படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கும் இர்பானுக்கு இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி கூறியதாவது:

ஒரு பால்கார இளைஞனுக்கு வரும் இரண்டு காதல்கள்தான் கதை. பால்காரனாக இர்பான் நடிக்கிறார், அவரது காதலிகளாக அர்ச்சனாவும், அருந்ததி நாயரும் நடிக்கிறார்கள். 1990களில் நடக்கும் கதை.

இதனால் அந்த சாயலில் உள்ள ஒரு கிராமத்தை தேடிச் சென்று படமாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் இர்பானை மாடுகளிடம் பால் கறக்கச் சொல்லி பயற்சி கொடுத்தோம்.

நிஜத்தில் பணக்காரவீட்டு பையனான இர்பான் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டார். அப்படி இருந்தும் படப்பிடிப்பில் பால்கறக்கும் காட்சியில் மாட்டிடம் நிறைய உதை வாங்கியிருக்கிறார். நடிப்புக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் ரமேஷ் ரங்கசாமி.


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்
பொங்கி எழு மனோகராவை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாரான இர்பான்
பொங்கி எழு மனோகரா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு
ஜன.30ல் பொங்கி எழு மனோகரா: அஜீத், சரத்குமாருடன் போட்டி போடும் இர்பான்
மனோகருடு இசை வெளியீட்டு விழாவில் நிறைவேறாத ஆசையை தெரிவித்த ஷங்கர்
பொங்கி எழு மனோகரா ஜனவரி 30க்கு தள்ளிப்போனது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions