பொங்கி எழு மனோகரா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

Bookmark and Share

பொங்கி எழு மனோகரா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

இர்பான் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘பொங்கி எழு மனோகரா’. இப்படத்தில் அர்ச்சனா, அருந்ததி ராய் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். சிங்கம் புலி, சம்பத் ராம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார்.

காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகப் போவதாக கடந்த ஒருவாரமாக நாளிதழ்களிலும், இணையதளங்களிலும் விளம்பரங்கள் வெளிவந்தன. இந்நிலையில், படம் நாளை வெளியாகாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, படக்குழுவினரிடம் கேட்டபோது, ‘பொங்கி எழு மனோகரா’ படத்தை நாளை வெளியிட முடிவு செய்திருந்தோம். இந்த படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டோம்.

ஆனால், நாளை ‘இசை’, ‘புலன்விசாரணை 2’, ‘தரணி’, ‘கில்லாடி’, ‘டூரிங் டாக்கீஸ்’ ஆகிய படங்கள் வெளியாவதால் நாங்கள் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆகையால், படத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளோம். படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். 


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்
பொங்கி எழு மனோகராவை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாரான இர்பான்
பொங்கி எழு மனோகராவுக்காக மாடுகளிடம் உதை வாங்கிய இர்பான்
ஜன.30ல் பொங்கி எழு மனோகரா: அஜீத், சரத்குமாருடன் போட்டி போடும் இர்பான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions