ரூ.1½ லட்சம் கேட்டு மிரட்டல்: நடிகர் பொன்னம்பலம் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

Bookmark and Share

ரூ.1½ லட்சம் கேட்டு மிரட்டல்: நடிகர் பொன்னம்பலம் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள சோரம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

நடிகர் பொன்னம்பலம் (அ.தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர்) மதுரையில் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், அந்த அறக்கட்டளைக்கு நாள் வாடகை அடிப்படையில் எனது காரை கொடுக்கும்படியும் விருதுநகரை சேர்ந்த உமாஜமான், அக்குபாய் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். அதன்படி, கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் காரை கொடுத்தேன். நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான வாடகையை மட்டும் கொடுத்தனர். இந்த நிலையில், அறக்கட்டளையை சென்னைக்கு மாற்றி விட்டதாகவும், காரை சென்னைக்கு எடுத்து செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர். அதற்கு, சம்மதித்தேன்.

2012–ம் ஆண்டில் இருந்து வாடகை பணத்தை தரவில்லை. இதற்கிடையே, அந்தக்காரை நடிகர் பொன்னம்பலம் அடமானம் வைத்திருப்பதாகவும், 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் காரை திரும்ப ஒப்படைப்பதாகவும், இல்லாதபட்சத்தில் காரை உடைத்து பழைய இரும்புக்கடையில் விற்று விடுவதாகவும் கூறி பொன்னம்பலத்தின் உதவியாளர் மணி என்பவர் மிரட்டினார்.

வாடகைப் பணம் மற்றும் காரை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபடும் நடிகர் பொன்னம்பலம், அவருடைய உதவியாளர் மணி, அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெ.ஜெயக்குமரன் ஆஜராகி வாதாடினார். இந்த புகார் சம்பந்தமாக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இருந்து உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாக அரசு வக்கீல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மனு மீதான விசாரணையை வருகிற 13–ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.


Post your comment





Related News
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
பலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி!
இந்த வாரம் வெளியேறப்போவது யார்? புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
பெண்ணிடம் இப்படியா ஆபாசமாக பேசுவது? சர்ச்சையில் சிக்கிய பொன்னம்பலம்
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions