நடிகர் பொன்னம்பலம் மீது மோசடி புகார்: 8 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

நடிகர் பொன்னம்பலம் மீது மோசடி புகார்: 8 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள சோரம் பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் பொன்னம்பலம் (அ.தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர்) மதுரையில் அறக்கட்டளை நடத்தி வருவதாகக்கூறி, அந்த அறக்கட்டளைக்கு நாள் வாடகை அடிப்படையில் எனது காரை பெற்று வாடகையே தராமல் பின்பு அந்த காரை விற்று மோசடி செய்து விட்டார்.

எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெ.ஜெயக்குமரன் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, “மனுதாரரின் புகாரை சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் 8 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். 

 


Post your comment





Related News
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
பலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி!
இந்த வாரம் வெளியேறப்போவது யார்? புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
பெண்ணிடம் இப்படியா ஆபாசமாக பேசுவது? சர்ச்சையில் சிக்கிய பொன்னம்பலம்
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions