பூ பார்வதிக்குள் இருக்கும் பாடகி!

Bookmark and Share

பூ பார்வதிக்குள் இருக்கும் பாடகி!

பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்துள்ள பூ பார்வதி, தற்போது கமலின், உத்தமவில்லன் படத்திலும் நடித்துள்ளார். கதைப்படி ஜெயராமின் மகளாகவும், கமலின் மருமகளாகவும் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்துள்ள பூஜா குமார், ஆண்ட்ரியாவின் நடிப்பை தூக்கலாக பேசிய கமல், பார்வதியுன் நடிப்பும் அழுத்தமாக பதிந்திருப்பதாக சொன்னார். அதனால் படத்தில் தானும் ஒரு ஹீரோயின் என்கிற பாவணையிலேயே இருக்கிறார் பார்வதி.

மேலும், உத்தமவில்லன் ஆடியோ விழாவில் மற்ற நாயகிகளுடன் அவரும் மேடையேறியபோது, எஸ்.ஜானகியுடன் இணைந்து கமல் பாடிய, கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலின் பல்லவியை அற்புதமாக பாடினார் பார்வதி.

அதையடுத்து பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருந்த கமலும், அங்கிருந்தபடியே மைக்கை பிடித்தபடி அந்த பல்லவியில் ஒரு வரியை பாடினார். அப்போது பார்வதியின் அற்புதமான குரல்வளத்தைக்கேட்டு அரங்கமே அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்தது.

ஆனால், சிறப்பாக பாடும் திறமையும், குரல்வளமும் கொண்ட பார்வதி, சினிமாவில் பாடுவதற்கான முயற்சி எடுத்ததில்லையாம். ஆனால், இப்போது பல நடிகைகள் பின்னணி பாடிக்கொண்டிருப்பதால் அவருக்கும் அந்த ஆசை ஏற்பட்டிருக்கிறதாம்.

அதனால்தான் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருந்த பார்வதி, உத்தமவில்லன் ஆடியோ விழா பெரிய மேடை என்பதால் பாடி தனக்குள் இருக்கும் பாடகியை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டினாராம்.


Post your comment





Related News
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions