கார் மோதி பெண் காயம்: நடிகை பூஜாகாந்தி கைது

Bookmark and Share

கார் மோதி பெண் காயம்: நடிகை பூஜாகாந்தி கைது

தமிழில் கொக்கி, திருவண்ணாமலை, தலையெழுத்து போன்ற படங்களில் பூஜா காந்தி நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பூஜா காந்தி பெங்களூரில் உள்ள ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டு இருந்தார். காரை அவர் வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த வர்ஷா சகானி என்ற 55 வயது பெண் மேல் அவரது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் அப்பெண் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பூஜா காந்தி காரை நிறுத்தாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த பெண்ணை தூக்கி போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஜெயநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பூஜா காந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, பூஜா காந்தியை அவரது வீட்டில் கைது செய்தோம். பெண் மேல் காரில் மோதி விட்டு உடனே அவர் தலைமறைவாகி விட்டதால் விபத்து குறித்து போலீசுக்கு தெரிய படுத்தாமல் அவர் மறைந்தது குற்றமாகும். பூஜா காந்தியிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெறப்பட்டு உள்ளது என்றனர்.


Post your comment





Related News
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
சிரிக்க வைத்த காமெடி நடிகை காந்திமதி அழுது இறந்து போன அவலம்!
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions