நடிகை பூஜா காந்தி கைதாகி விடுதலை

Bookmark and Share

நடிகை பூஜா காந்தி கைதாகி விடுதலை

தமிழில் கொக்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா காந்தி, அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் இங்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் கன்னடம் பக்கம் போய்விட்டார்.

அங்கு நம்பர் ஒன் நடிகையாக வந்த பூஜா அரசியலிலும் குதித்தார். கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அந்த தேர்தலில் அனுமதி இல்லாத வாகனத்தில் பூஜா பிரச்சாரம் செய்தாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பெங்களூரு ஐதராபாத் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்படி பூஜாவுக்கு கோர்ட் 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இதனால் கடந்த 23ந் தேதி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து நேற்று (ஏப் 27) பூஜா காந்தி கோர்ட்டுக்கு வந்தார்.

இதை முன்பே அறிந்திருந்த போலீசார் கோர்ட் வளாகத்திலேயே பூஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு பூஜா மனுதாக்கல் செய்திருந்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததற்கா கண்டனம் தெரிவித்ததோடு 500 ரூபாய் அபராதம் விதித்தது. கண்டனத்தை பெற்றுக் கொண்டு 500 ரூபாய் அபராதம் கட்டிவிட்டுச் சென்றார் பூஜா காந்தி.


Post your comment





Related News
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
சிரிக்க வைத்த காமெடி நடிகை காந்திமதி அழுது இறந்து போன அவலம்!
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions