தனுஷுடன் இணைந்து நடிப்பது எனக்கு அதிர்ஷ்டம் நடிகை பூஜா ஜவேரி

Bookmark and Share

தனுஷுடன் இணைந்து நடிப்பது எனக்கு அதிர்ஷ்டம் நடிகை பூஜா ஜவேரி

நடிகர் தனுஷிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்று அவருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் அறிமுக நடிகை பூஜா ஜவேரி. பாலிவுட் நடிகையான பூஜா ஜவேரி தற்போது பிரபு சாலமனின் புதிய படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பூஜா ஜவேரி, கீர்த்தி சுரேஷ் என்று 2 நாயகிகள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறும்போது "தனுஷுடன் இணைந்து நீங்கள் சில நிமிடங்களை செலவளித்தாலே அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.

அவரின் அர்ப்பணிப்பு, ஆளுமை மற்றும் நடிப்புத் திறமை ஆகியவை என்னைக் கவர்ந்தது. முதல் படத்திலேயே பிரபு சாலமன், தனுஷ் ஆகிய 2 பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து வேலை பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

எல்லோருடைய அறிமுகமும் இப்படி இருக்காது என்பதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக என்னை உணர்கிறேன். மேலும் பிரபு சாலமன் பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே படப்பிடிப்பிற்கு செல்கிறார்.

இதனால் நடிப்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது" இவ்வாறு பூஜா ஜவேரி தெரிவித்திருக்கிறார். அடுத்ததாக நடிகர் அதர்வா முரளியின் ருக்குமணி வண்டி வருது படத்தில் கிராமத்துப் பெண்ணாக பூஜா ஜவேரி நடிக்கவிருக்கிறார்.


Post your comment





Related News
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'
நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions