கண்டிஷன் போடும் பூஜாகுமார்...!

Bookmark and Share

கண்டிஷன் போடும் பூஜாகுமார்...!

கேயார் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் வெளியான படம் காதல் ரோஜாவே. முன்னாள் நடிகை ஷீலாவின் மகனான விஷ்ணு ஹீரோவாக நடித்த இந்தப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா குமார்.

காதல் ரோஜாவே படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே பூஜா குமாருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை. வெறுத்துப்போன பூஜாகுமார் சினிமாவுக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்த பூஜாகுமாரை நடிகை கௌதமி மூலம் கண்டுபிடித்த கமல் விஸ்வரூபம் படத்தில் மீண்டும் நடிக்க வைத்தார்.

அப்படத்தைத் தொடர்ந்து தற்போது உத்தமவில்லன் படத்தில் நடித்துள்ள பூஜா குமாருக்கு தற்போது 37 வயசு. ஆனாலும் இனி நடித்தால் அஜித், விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக மட்டுமே நடிப்பேன் என்கிறாராம் பூஜா குமார்.

இப்படி ஒரு முடிவை அவர் எடுப்பதற்கு முன் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இறைவி படத்தை ஒப்புக்கொண்டுவிட்டாராம். இறைவியில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா குமார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions