தமிழில் பேச ஆண்ட்ரியா உதவினார் பூஜா குமார் பூரிப்பு

Bookmark and Share

தமிழில் பேச ஆண்ட்ரியா உதவினார் பூஜா குமார் பூரிப்பு

தமிழில் பேசி நடிக்க ஆண்ட்ரியா உதவினார் என்றார் பூஜா குமார்.

நடிகை பூஜா குமார் கூறியது:

10 வருடங்களுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானேன். எனது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இன்ஜினியர், டாக்டர் என படித்தவர்கள்.

நானும் படிப்பில் கவனமாக இருந்தேன். இதற்காக வெளிநாடு புறப்பட்டு சென்றுவிட்டேன். ஓய்வு நேரம் கிடைத்தபோது நடித்தேன். நடனமும் கற்றுக்கொண்டேன். தமிழ் திரையுலகம் உலக அளவில் வளர்ந்திருக்கிறது. கமலுடன் விஸ்வரூபம் முதல்பாகம், 2ம் பாகம், உத்தம வில்லன் என அடுத்தடுத்து 3 படங்களில் நடித்திருக்கிறேன்.

விஸ்வரூபம் 2 படத்தில் நீருக்கடியில் நடக்கும் சண்டை காட்சியில் நடித்திருக்கிறேன். வேறு நடிகை யாராவது இதுபோல் செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. நடனத்தில் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன்.

விஸ்வரூபம் முதல் பாகத்தில் எனக்கு நடனம் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அப் செட் ஆனேன். அந்த குறை உத்தமவில்லன் படத்தில் தீர்ந்தது. தமிழில் வசனம் பேசுவதில் எனக்கு சிரமம் இருந்தது.

என்னுடன் நடித்த ஆண்ட்ரியா வசனங்களை மனப்பாடம் செய்ய உதவினார். எனக்கு 100 படம் நடிக்க வேண்டும் என்று ஆசை கிடையாது. ஆனால் அனுபவங்கள் எல்லாவற்றையும் நடிப்பில் கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


Post your comment

Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions