
கமல்ஹாசன் ஜோடியாக ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்திருந்த பூஜா குமார், மீண்டும் அவருடன் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’ படங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:தொடர்ந்து கமல் படங்களிலேயே நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள்.
அவருடன் 3 படங்களில் நடித்தது மிக இயல்பாக நடந்த விஷயம். அவர்தான் மீண்டும் என்னை தமிழ்ப் படவுலகிற்கு அழைத்து வந்தார். தற்போது சிலரிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதில் எனக்குப் பொருத்தமான கேரக்டரை தேர்வு செய்து நடிப்பேன். அடுத்த படத்தில் வேறொரு ஹீரோ நடிக்கிறார்.‘காதல் ரோஜாவே’ ரிலீசான பிறகு வெளிநாட்டில் செட்டிலானதால், தமிழில் பேச முடியவில்லை.
ஆனால், சில வார்த்தைகள் தெரியும். தற்போது தமிழில் சரளமாகப் பேச கற்றுக்கொள்கிறேன்.‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’ படங்களில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கும் நான், ‘உத்தம வில்லன்’ படத்தில் இடம்பெறும் இரணியன் நாடகத்தில் நடிக்கஒரு மாதம் பயிற்சி பெற்றேன்.
மேக்கப் போன்ற விஷயங்களுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். அதற்குரிய பலன் ரிலீசான பிறகு தெரியும். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
Post your comment