மாடல் அழகி பூஜா மிஸ்ரா கற்பழிக்கப்பட்டதாக புகார்!

Bookmark and Share

மாடல் அழகி பூஜா மிஸ்ரா கற்பழிக்கப்பட்டதாக புகார்!

புகழ்பெற்ற மாடல் அழகி பூஜா மிஸ்ரா. இவர் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலம் ஆனவர்.

இவர், பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் புகைப்பட படப்பிடிப்புக்காக கடந்த 10-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றார். அடையாளம் தெரியாத சிலர், அங்கு தன்னை கற்பழித்ததாக பூஜா மிஸ்ரா போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி அவர் போலீசில் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது:-

பத்திரிகையாளர் சந்திப்பும், மறுநாள் புகைப்பட படப்பிடிப்பும் ஒரு நடன கூடத்தில் நடைபெற்றது. நடன கூட உரிமையாளர், கட்டணத்தை அதிகரிப்பதற்காகவே, திட்டமிட்டு தாமதப்படுத்தினார். நான் படப்பிடிப்பில் இருந்தபோது, எனது பணம் ரூ.2 லட்சத்தை திருடிக் கொண்டார்.

புகைப்பட குழுவைச் சேர்ந்த 3 பேர் அதிக பணம் கேட்டு மிரட்டினர். 13-ந் தேதியன்று, எனக்கு மயக்க மருந்து கலந்த உணவு கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்டதும் மயங்கி கிடந்த என்னை அடையாளம் தெரியாத யாரோ கற்பழித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதன்பேரில், கற்பழிப்பு மற்றும் பிளாக்மெயில் வழக்குகளை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே சமயத்தில், நடன கூடத்தின் உரிமையாளர் ரிது தேஷ்வால், மாடல் அழகி பூஜா மிஸ்ரா மீது போலீசில் புகார் செய்துள்ளார். அதில், தங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.1.5 லட்சத்தை பூஜா மிஸ்ரா கொடுக்க மறுப்பதாகவும், 11-ந் தேதியன்று இரவு, தன்னை டெலிபோனில் மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இதையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Post your comment

Related News
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions