சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா

Bookmark and Share

சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி வசூலில் கலக்கிய படம் ‘பிரேமம்‘.

இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்து புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி. தற்போது மிகவும் பிஸியான நடிகை யாக உள்ளார். மலையாள ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை பூஜா கோலிவுட்டில் களமிறங்க உள்ளார். இதற்கு முன்னோட்டமாக பூஜா நாயகியாக நடித்த ‘காரா’ என்ற குறும் படம் யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது.

கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படத்தை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் பார்த்தனர். பின்னர் பூஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்து வருகிறேன். எனது அக்காள் சாய் பல்லவி சினிமா துறையில் இருப்பதால் எனக்கும் பட வாய்ப்புகள் வருகிறது. படிப்பு முடிந்த உடன் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். நல்ல கதையுடன் கூடிய பட வாய்ப்புகள் வந்தால் தற்போதே படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவையை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்த குறும்படத்தை, ஆஜித் என்ற இளைஞர் இயக்கி உள்ளார்.


Post your comment





Related News
அண்மையில் வெளியான படத்தை பார்த்து கண்ணீர்விட்ட சாய் பல்லவி- என்ன படம் அது?
சாய் பல்லவி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்
சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்
சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படம் இதுதானா? அதுவும் இந்த ஹீரோவுடன் தானா?
மலர் டீச்சரோட முதல் தமிழ் படமே விஜய்யோடு தானாம்- அப்படி என்ன படம்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
சினிமாவில் பாலியல் கொடுமைகளை தவிர்க்க சாய் பல்லவி போட்ட புது பிளான்!
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
சேட்டன்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்த சாய் பல்லவி: சாட்சி இதோ!
முன்னணி நடிகைகளை தோற்கடித்த சாய் பல்லவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions