பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி

Bookmark and Share

பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை, அரண்மனை–2 படங்களில் குறிப்பிட்ட வேடத்தில் நடித்தார். என்றாலும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘முத்தின கத்திரிக்கா’. விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தது ஏன்? பூனம் பஜ்வா தனது ஜோடி ஆனது எப்படி? என்பதற்கு சுந்தர்.சி அளித்த பதில்....

தொலைக் காட்சியில் எந்த மொழி படம் ஒளிபரப்பானாலும் அதை பார்ப்பேன். இது போல் ‘வெள்ளி மூங்கா’ மலையாளப் படத்தை பார்த்தேன். சிறிது நேரம் பார்த்தவுடன் அதை முழுவதும் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அந்த அளவு படம் அருமையாக இருந்தது.

2014–ல் திரைக்கு வந்த இந்த படத்தை தமிழில் ‘ரீமேக்’ செய்ய விரும்பினேன். எனவே அதற்கான உரிமையை வாங்கினேன்.

40 வயதான பிறகும் திருமணம் ஆகாத நாயகன் இளம் வயது நாயகியை விரும்பும் கதை. அரசியல், காமெடி, சென்டிமென்ட் கலந்த இந்த படத்தை பார்த்தவுடன் இதில் நானே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

இப்போதெல்லாம் ஒரு படத்தில் பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிபவர்கள், உடனே அடுத்த படத்திற்கு இயக்குனர் ஆகி விடுகிறார்கள். இதனால் அவர்களால் தொடர்ந்து தரமான படங்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

நான் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். சினிமாவில் எந்த வேலையும் செய்ய பழகிக்கொண்டு படிப்படியாக இயக்குனர் ஆனேன். அதே போல் என்னிடம் 6 வருடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வெங்கட்ராமனை ‘முத்தின கத்திரிக்காய்’ படத்துக்கு இயக்குனர் ஆக்கி இருக்கிறேன். இவர் வசனம் எழுதுவதில் திறமைசாலி. நான் இல்லாத போது எனது படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். சிறப்பாக கதை எழுதுபவர். இந்த படத்தில் 25 சதவீதம் தான் மலையாள படத்தில் ரீமேக். மற்ற கதை முழுவதும் வெங்கட் எழுதியது. வசனமும் அவர் தான். மிகவும் சிறப்பாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

எனக்கு ஜோடியாக பூனம் பஜ்வாவை நடிக்க வைத்திருக்கிறேன். கதைப்படி நாயகன் இளம் வயது பெண்ணை காதலிக்க வேண்டும். ஏற்கனவே எனது படங்களில் நடித்தவர், குடும்பங்கான, இளம் தோற்றம் கொண்டவர். எனவே அவரை எனது ஜோடியாக நடிக்க வைத்தேன்.

பெரிய பட்ஜெட் படங்களில் எனது ஹீரோவுக்கு பிரபல நாயகிகள் நடிப்பார்கள். நான் இயக்குனர் என்பதை விட இதில் நடிகனாக இருக்கிறேன். அதற்கு பொருத்தமான ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் சொன்னபடி நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?
இந்திய அணிக்காக தன் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாண்டே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions