பூனம் பஜ்வாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சுந்தர்.சி

Bookmark and Share

பூனம் பஜ்வாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘அரண்மனை’. வினய், ராய் லட்சுமி, ஹன்சிகா மொத்வானி, ஆண்ட்ரியா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சுந்தர்.சி முடிவு செய்தார். இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க ஏற்கெனவே சித்தார்த், த்ரியா, ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், மேலும், இப்படத்தில் நடிக்க மேலும் ஒரு நடிகையை தேடி வந்தார் சுந்தர்.சி. 

இதற்காக சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த படத்தில் பூனம் பஜ்வாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘ஆம்பள’ படத்தில் பூனம் பஜ்வா சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ஆகையால், இந்த படத்தில் பூனம் பஜ்வாவுக்கு முக்கிய வேடம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா என மீண்டும் பெரிய பட்டாளத்தோடு களமிறங்கும் சுந்தர்.சி இந்த படத்தை முந்தைய பாகத்தைவிட பெரிய அளவில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

 


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions