சைகை படத்தில் பூனம்கவுர்!

Bookmark and Share

சைகை படத்தில் பூனம்கவுர்!

வெடி, 6 கேண்டில்  படங்களுக்குப் பிறகு என் வழி தனி வழி, ஆச்சர்யம் ஆகிய படங்களில் நடித்தார் பூனம் கவுர். அந்த படங்கள் ஹிட்டடித்தால் அடுத்தபடியாக முன்னணி நடிகர்களுடன் நடித்து விடலாம் என்று நினைத்திருந்தார்.

ஆனால் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், அதன்பிறகு அவருக்கு ரணம், வதம், வேட்டை மன்னன் ஆகிய படங்களே கிடைத்தன. இதில் சிம்புவின் வேட்டை மன்னன் என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

இந்த நிலையில், தாய்மொழியான தெலுங்கில் சில படங்களில் நடித்து வரும் பூனம்கவுர், அவ்வப்போது தமிழ்ப்படங்களில் நடிக்க வரும்போது கம்பெனிகளுக்கு ஏறி இறங்குவதையும் நிறுத்தாமல் தொடர்ந்து வந்தார்.

அதன்காரணமாக தற்போது அவருக்கு சைகை என்றொரு படமும் கிடைத்திருக்கிறது. சூர்யா நடித்த சந்திப்போமா படத்தை இயக்கிய இந்திரகுமார் இந்த படத்தை இயக்குகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரீத்தா விஜயகுமார் நடித்த அப்படம் 1998ல் வெளியானது.

அதையடுத்து அவர் இயக்கும் இந்த படத்தில் புதுமுக ஹீரோ ஒருவர் நடிக்கிறாராம். அதனால் பூனம்கவுருக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதோடு இதற்கு முன்பு கிளாமர் விசயத்தில் அடக்கிவாசித்து வந்த அவர், இந்த படத்தில் பாடல் காட்சிகளில் கவர்ச்சி கதவுகளை திறந்து தாராளம் காட்டியுள்ளாராம். 


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions