டான்ஸ் ஆடியதால் ஏர்போர்ட்டிலிருந்து பூனம் பாண்டே வெளியேற்றம்

Bookmark and Share

டான்ஸ் ஆடியதால் ஏர்போர்ட்டிலிருந்து பூனம் பாண்டே வெளியேற்றம்

2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. இதையடுத்து அவர் இந்தி படங்களில் நடித்து வந்தார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை உன்னிப்பாக கவனித்து வருகிறார். கடந்த 15ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும்போட்டி நடந்தது.

அந்நாளில் ஐதராபாத்தில் ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மும்பை விமான நிலையத்துக்கு வந்தார் பூனம்.அங்கு டிவியில் கிரிக்கெட் போட்டியை பயணிகள் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்திய அணியின் சூப்பர் ஆட்டம் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது. அந்த நேரம் அங்குவந்த பூனம் பாண்டே ரசிகர்களோடு ரசிகராக நின்றுக்கொண்டார். ஒவ்வொரு முறை பவுண்டரிக்கு பந்தை இந்திய வீரர்கள் விளாசியதும் நடனம் ஆடி அமர்க்களப்படுத்தினார்.

இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அக்கம்பக்க பிளாட்பாரங்களில் நின்றிருந்த பயணிகளும் பூனம் பாண்டேயின் அலப்பறையை கண்டு கும்மாளம் போட்டப்படி நடனம் ஆடத் தொடங்கினர்.  

இதையறிந்த விமான நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த பூனம் பாண்டேவை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேவின் 100 % காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions