காதலில் விழுந்தாரா 'பூர்ணா'...

Bookmark and Share

காதலில் விழுந்தாரா 'பூர்ணா'...

'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் அறிமுகமானவர் பூர்ணா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவருக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வருவார் என்று கருதப்பட்டவர். சரியான படங்களைத் தேர்வு செய்து நடிக்காததால் அப்படியே பின் தங்கிவிட்டார். தற்போது அவர் சில வருடங்களுக்கு முன் நடித்த 'அர்ஜுனன் காதலி' படம் வெளிவர உள்ளது. 'அப்பாடக்கர்' படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் 'படம் பேசும்' படத்தில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் சமீபத்தில்தான் ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாடி நடித்துக் கொடுத்தார். அதோடு 'அவுனு 2' என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை இயக்கியுள்ள ரவிபாபுவுடன் பூர்ணாவை கிசுகிசுத்து தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இருவரும் காதலிப்பதாகவும், லிவிங் டு கெதர் ஆக வாழ்வதாகவும் அவர்கள் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட இயக்குனர் ரவிபாபு கோபத்துடன் பேசியிருக்கிறார். “என்  படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் படம் முடிந்த பின் நான் எந்த பேச்சையும் வைத்துக் கொள்ள மாட்டேன்.

இதற்கு முன் பூமிகா என்னுடைய மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.  அதனால் நான் அவரைக் காதலிக்கிறேன் என்று அர்த்தமா. பூர்ணாவும் என்னுடைய மூன்று படங்களில் நடித்திருக்கிறார். அவருடன் எங்களது படம் சம்பந்தமான உறவு மட்டுமே. மற்றபடி எதுவுமில்லை,” என்று சொல்லியிருக்கிறார். 


Post your comment





Related News
திடீரென பைத்தியம் ஆன பிரபல நாயகி- டுவிட்டரில் பரபரப்பு
சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா
காதல் திருமணம் கிடையாது நடிகை பூர்ணா பேட்டி
தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!
மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போட்ட பூர்ணா
ஒரு வார்த்தை கூட பேசாத பூர்ணா...!
“இயக்குனர்கள் மலையாள நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்”- பூர்ணா குற்றச்சாட்டு..!
“ராஜேஷ் பிள்ளை என்னை ஏமாற்றிவிட்டார்” - குமுறும் பூர்ணா
இந்தி பாடல்களில் ஆர்வம் காட்டும் பூர்ணா!
\'கிளாசிக்கல்\' நடனமாடும் பூர்ணா...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions