“ராஜேஷ் பிள்ளை என்னை ஏமாற்றிவிட்டார்” - குமுறும் பூர்ணா

Bookmark and Share

“ராஜேஷ் பிள்ளை என்னை ஏமாற்றிவிட்டார்” - குமுறும் பூர்ணா

யார் ராஜேஷ்.. அவரோட பிள்ளை யார்.. அவர் ஏன் பூர்ணாவை ஏமாற்றினார் என விஷயத்தை துண்டுதுண்டாக பிரித்து பார்த்தால் கொஞ்சம் வயலன்ட்டாகத்தான் தோன்றும்.. ஆனால் விஷயம் அந்த அளவுக்கெல்லாம் சீரியசானது இல்லை..  மலையாளத்தில் 'ட்ராபிக்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர்தான் இந்த ராஜேஷ் பிள்ளை.. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'மிலி' திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

 நிவின்பாலி, அமலாபால் நடித்திருந்த இந்தப்படத்தில் பூர்ணாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியானபின்னர் தியேட்டருக்கு சென்று பார்த்த பூர்ணாவுக்கு ஷாக்கோ ஷாக்.. காரணம் அவர் நடித்த நிறைய காட்சிகளை எடிட்டர் சாப்பிட்டு விட்டிருந்தார்.. அதுமட்டுமல்ல, கதையில் அவரது கேரக்டருக்கே முக்கியத்துவம் இல்லாத வகையில் செய்துவிட்டார்களாம்.

அதனால் இயக்குனர் முதலில் தன்னிடம் சொன்னபடி தனது கேரக்டரை காட்டாமல் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று என தற்போது குமுறுகிறார் பூர்ணா.. இந்தப்படத்தின் கதையும் தனது கேரக்டரும் மீண்டும் தன்னை டாப்பிற்கு கொண்டு செல்லும் என நினைத்த பூர்ணா இந்தப்பத்தில் நடிப்பதற்காக சில படங்களில் தேடிவந்த வாய்ப்பையும் ஒதுக்கி தள்ளினேன் என்கிறார்..

ஆனால் படத்தின் இயக்குனர் ராஜேஷ் பிள்ளையோ புதுக்கதை ஒன்றை சொல்கிறார்.. இந்தப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பின்போது நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிப்பதில் தேதி குழப்பம் ஏற்பட்டது..

அதை காரணம் காட்டி பூர்ணா சரியானபடி படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.. அதனால் தான் நாங்கள் கதையின் போக்கையும் அவரது கதாபாத்திரத்தையும் சற்றே மாற்றவேண்டியதாக ஆகிவிட்டது என்கிறார். 


Post your comment





Related News
திடீரென பைத்தியம் ஆன பிரபல நாயகி- டுவிட்டரில் பரபரப்பு
சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா
காதல் திருமணம் கிடையாது நடிகை பூர்ணா பேட்டி
தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!
மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போட்ட பூர்ணா
காதலில் விழுந்தாரா \'பூர்ணா\'...
ஒரு வார்த்தை கூட பேசாத பூர்ணா...!
“இயக்குனர்கள் மலையாள நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்”- பூர்ணா குற்றச்சாட்டு..!
இந்தி பாடல்களில் ஆர்வம் காட்டும் பூர்ணா!
\'கிளாசிக்கல்\' நடனமாடும் பூர்ணா...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions