தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!

Bookmark and Share

தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் பூர்ணா. அவர் வந்த நேரத்தில் அசின் இடத்தை பிடிக்கப்போகிறார் என்றெல்லாம்கூட பில்டப் கொடுத்தார்கள். ஆனால், பூர்ணா நடித்த எந்த படமும் ஹிட்டாக அமையாததால் இப்போது வரை தமிழ் சினிமாவின் ராசியில்லாத நடிகை பட்டியலில் அழுத்தமாக இடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

இப்படி தமிழ் சினிமா கொடுத்த ஏமாற்றத்தில் ஆந்திரா பக்கம் சென்றவருக்கு சில படங்களில் கிளாமரான கதாநாயகி வேடம் கிடைத்தபோதும் படங்கள் வெற்றி பெற்றதால் அங்கு ராசியான நடிகையாகி விட்டாராம் பூர்ணா. அதிலும் அவுனு-2 என்ற படத்தில் குளியல் காட்சியில்கூட நடித்திருக்கிறார் பூர்ணா.

ஆனால் அப்படி அவர் நடித்த காட்சியை அதிக அழகியலுடன் படமாக்கியிருந்தார்களாம். அதனால்தான் மேலுமொரு படத்திலும் கவர்ச்சிகரமான ரோலில் நடிப்பதாக சொல்லும பூர்ணா.

தமிழில் கைவசம் படமிருந்தபோதும், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இல்லையாம். காரணம், அருள்நிதியுடன் நடித்த தகராறு படம்தான் கடைசியாக தமிழில் அவர் அதிகமாக எதிர்பார்த்த படமாம்.

அப்படத்தில் கதாநாயகி என்றபோதும் காதலனை அடைய வேண்டும என்பதற்காக வில்லியாக உருவெடுத்த அந்த வேடம் என்னை வெகுவாக கவர்ந்தது.

ஆனபோதும் அது ரசிகர்களை கவரவில்லை என்பது என் துரதிர்ஷடம் என்று கூறும் பூர்ணா, தமிழ், மலையாளத்தைவிட சமீபகாலமாக தெலுங்கு படங்களே கைகொடுத்து வருவதால் அந்த மொழிக்குப்போக மீதமிருக்கும் நேரங்களில்தான் மற்ற மொழிப்படங்களுக்கு கால்சீட்கொடுக்கிறாராம்.


Post your comment





Related News
திடீரென பைத்தியம் ஆன பிரபல நாயகி- டுவிட்டரில் பரபரப்பு
சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா
காதல் திருமணம் கிடையாது நடிகை பூர்ணா பேட்டி
மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போட்ட பூர்ணா
காதலில் விழுந்தாரா \'பூர்ணா\'...
ஒரு வார்த்தை கூட பேசாத பூர்ணா...!
“இயக்குனர்கள் மலையாள நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்”- பூர்ணா குற்றச்சாட்டு..!
“ராஜேஷ் பிள்ளை என்னை ஏமாற்றிவிட்டார்” - குமுறும் பூர்ணா
இந்தி பாடல்களில் ஆர்வம் காட்டும் பூர்ணா!
\'கிளாசிக்கல்\' நடனமாடும் பூர்ணா...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions