காதல் திருமணம் கிடையாது நடிகை பூர்ணா பேட்டி

Bookmark and Share

காதல் திருமணம் கிடையாது நடிகை பூர்ணா பேட்டி

தமிழில் பரத் ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த நடிகை பூர்ணா. மேலும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, வித்தகன், தகராறு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது பூர்ணா தெலுங்கு ஒளிப்பதிவாளரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது. 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- “என்னுடைய சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். தற்போது 4 படங்கள் கைவசம் உள்ளன. நான் காதலிப்பதாக செய்திகள் பரவி உள்ளன. அது உண்மை இல்லை. 

நான் யாரையும் காதலிக்கவில்லை. திருமணத்துக்கு தற்போது நான் தயாராகிவிட்டேன். விரைவில் என் திருமணம் நடக்கும். ஆனால் அது காதல் திருமணமாக இருக்காது. பெற்றோர் எனக்கு பொருத்தமான வரன் பார்த்து வருகிறார்கள். அவர்கள் தேர்வு செய்யும் மாப்பிள்ளையை மணப்பேன்”. இவ்வாறு பூர்ணா தெளிவாக கூறிவிட்டார்.


Post your comment





Related News
திடீரென பைத்தியம் ஆன பிரபல நாயகி- டுவிட்டரில் பரபரப்பு
சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா
தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!
மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போட்ட பூர்ணா
காதலில் விழுந்தாரா \'பூர்ணா\'...
ஒரு வார்த்தை கூட பேசாத பூர்ணா...!
“இயக்குனர்கள் மலையாள நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்”- பூர்ணா குற்றச்சாட்டு..!
“ராஜேஷ் பிள்ளை என்னை ஏமாற்றிவிட்டார்” - குமுறும் பூர்ணா
இந்தி பாடல்களில் ஆர்வம் காட்டும் பூர்ணா!
\'கிளாசிக்கல்\' நடனமாடும் பூர்ணா...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions