“இயக்குனர்கள் மலையாள நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்”- பூர்ணா குற்றச்சாட்டு..!

Bookmark and Share

“இயக்குனர்கள் மலையாள நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்”- பூர்ணா குற்றச்சாட்டு..!

இயக்குனர் ராஜேஷ் பிள்ளை, 'மிலி' படத்தில் தனது காட்சிகளை குறைத்து தன்னை ஏமாற்றிவிட்டார் என சமீபத்தில் பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார் நடிகை பூர்ணா @ ஷாம்னா காசிம்.

இந்தப்படத்தின் கதையும் தனது கேரக்டரும் மீண்டும் தன்னை டாப்பிற்கு கொண்டு செல்லும் என நினைத்த பூர்ணா, இந்தப்படத்தில் நடிப்பதற்காக சில படங்களில் தேடிவந்த வாய்ப்பையும் ஒதுக்கி தள்ளினாராம்.

அதனால் இப்போது மலையாள இயக்குனர்கள் பக்கம் தனது கோபத்தை காட்டும் விதமாக, “மலையாள நடிகைகளை மலையாள இயக்குனர்கள் திட்டமிட்டே தவிர்க்கிறார்கள்” என்கிற இன்னொரு புகாரையும் வாசித்திருக்கிறார்.

“மலையாளத்தில் எத்தனையோ திறமையான நடிகைகள் இருந்தாலும் வெளி மாநிலத்தில் இருந்து நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள்” என்று கொதிக்கும் பூர்ணாவுக்கு மம்முட்டி நடித்த  'ராஜாதிராஜா' படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதில் இருந்து மலையாளத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் வாய்ப்புகளே தேடி வருகின்றனவாம்.

“மலையாளிகளை பொறுத்தவரை நான் 'ஹாட் ஸ்டார்'. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கிலோ நான் பக்கத்து வீட்டுப்பெண் மாதிரியானவள்.. அதனால் தான் மலையாளத்தில், தொடர்ந்து ஒரு பாடலுக்கு மட்டும் ஆட கூப்பிடுபவர்களுக்கு ஸ்ட்ரிக்ட்டாக 'நோ' சொல்லி விடுகிறேன்..

ஒரு தடவை ஆடிவிட்டால் தொடர்ந்து அதே மாதிரி வாய்ப்புகளுடனேயே தேடி வருவது என்ன மெண்டாலிட்டியோ..?” என மலையாள இயக்குனர்கள் மீது வெறுப்பில் இருக்கிறார் பூர்ணா.


Post your comment





Related News
திடீரென பைத்தியம் ஆன பிரபல நாயகி- டுவிட்டரில் பரபரப்பு
சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா
காதல் திருமணம் கிடையாது நடிகை பூர்ணா பேட்டி
தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!
மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போட்ட பூர்ணா
காதலில் விழுந்தாரா \'பூர்ணா\'...
ஒரு வார்த்தை கூட பேசாத பூர்ணா...!
“ராஜேஷ் பிள்ளை என்னை ஏமாற்றிவிட்டார்” - குமுறும் பூர்ணா
இந்தி பாடல்களில் ஆர்வம் காட்டும் பூர்ணா!
\'கிளாசிக்கல்\' நடனமாடும் பூர்ணா...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions