ஒரு வார்த்தை கூட பேசாத பூர்ணா...!

Bookmark and Share

ஒரு வார்த்தை கூட பேசாத பூர்ணா...!

'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் நாயகியாக அறிமுகமான பூர்ணா, அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே விஜய்யால், பார்க்க அசின் போல உள்ளார் என்று பாராட்டப்பட்டார்.

தொடர்ந்து பூர்ணாவும் தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்தால் ஏதேதோ படங்களில் நடித்து அவரை அவரே பின்னுக்குத் தள்ளிக் கொண்டார்.

நல்ல அழகும், உடல்வாகும் கொண்ட பூர்ணா சிறப்பாக  நடனம் ஆடும் திறமை கொண்டவர். அந்த நடனத் திறமைதான் அவருக்கு தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் 'ஸ்ரீமந்துடு' படத்தில் பூர்ணா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ஒரு பாடல் என்றதும் ஐட்டம் டான்ஸ் பாடல் என நினைக்க வேண்டாம், அது ஒரு கிளாசிக்கல் நடனம் இடம் பெறும் பாடல்.

இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் மகேஷ்பாபுவுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தாராம் பூர்ணா.

படப்பிடிப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினாராம். படப்பிடிப்பு முடிந்து கிளம்பும் போது மட்டும் மகேஷ் பாபுவிடம் வருகிறேன் என்று சொல்லி மட்டும் கிளம்பினாராம். அதைப் பார்த்து யூனிட்டே ஆச்சரியப்பட்டுப் போனதாம்.


Post your comment





Related News
திடீரென பைத்தியம் ஆன பிரபல நாயகி- டுவிட்டரில் பரபரப்பு
சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா
காதல் திருமணம் கிடையாது நடிகை பூர்ணா பேட்டி
தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!
மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போட்ட பூர்ணா
காதலில் விழுந்தாரா \'பூர்ணா\'...
“இயக்குனர்கள் மலையாள நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்”- பூர்ணா குற்றச்சாட்டு..!
“ராஜேஷ் பிள்ளை என்னை ஏமாற்றிவிட்டார்” - குமுறும் பூர்ணா
இந்தி பாடல்களில் ஆர்வம் காட்டும் பூர்ணா!
\'கிளாசிக்கல்\' நடனமாடும் பூர்ணா...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions