3 வது முறை பெயரை மாற்றிய நடிகை

Bookmark and Share

3 வது முறை பெயரை மாற்றிய நடிகை

சொந்த பெயரில் நடிக்கும் நடிகைகள் மிகக் குறைவு. படத்துக்காக பெயர் மாற்றிக்கொள்வது அதிகரித்துவிட்டது. வித்தகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பூர்ணா பிறமொழியில் ஷாம்னா காசிம் என்ற சொந்த பெயரில் நடிக்கிறார்.அதேபோல் கயல் படத்தில் நடித்திருக்கும் ஆனந்தி ஏற்கனவே தெலுங்கு படங்களில் ரக்ஷிதா என்ற பெயரில் நடித்திருக்கிறார்.

இவரே பிறகு பொறியாளன், விசாரணை போன்ற தமிழ் படங்களில் ஹாசிகா என்ற பெயரில் நடித்தார். பின்னர், பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்‘ படத்தில் ஆனந்தி என்ற பெயரில் நடித்தார்.

இவர் நடித்த படங்களுக்கு பாப்புலாரிட்டி கிடைத்த அளவுக்கு தனக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தத்தில் ஆழ்ந்தார். எல்லாவற்றுக்கும் காரணம் பெயர் ராசி சரியாக இல்லாததுதான் என்று சிலர் அவரிடம் கூறினர்.

இதையடுத்து தெலுங்கு படங்களில் தனது பெயரை மீண்டும் ரக்ஷிதா என்றேமாற்றிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் தமிழில் ஆனந்தி என்ற பெயரிலேயே நடிக்க முடிவு செய்திருக்கிறார். அடுத்து 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் நடிக்க உள்ளார்.


Post your comment





Related News
சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் அமரகாவியம்
வெற்றிமாறனால் வெற்றியில்லை...! கவலையில் கதிரேசன்!
பொறியாளனில் சிவில் இன்ஜினியர் பிரச்னை- வெற்றிமாறன்
பொறியாளன் படத்தால் வாய்ப்புகளை வாரிக்குவிக்கும் ஹரீஸ் கல்யாண்
தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும் தகுதி இருந்தால்தான் ஜெயிக்க முடியும்: ஹரிஷ் கல்யாண்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions