பவர்ஸ்டாரின் அதிரடி அறிவிப்பு!

Bookmark and Share

பவர்ஸ்டாரின் அதிரடி அறிவிப்பு!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு மார்க்கெட்டை பிடித்தவர் பவர்ஸ்டார்  சீனிவாசன். அதையடுத்து அதிரடியாக படங்களை கைப்பற்றியபோதும், திடீரென மோசடி வழக்கில் ஜெயிலுக்கு சென்றதால் உச்சத்துக்கு சென்ற பவரின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டது.

இருப்பினும் சுதாரித்துக்கொண்டு மீண்டும் மார்க்கெட்டை எட்டிப்பிடித்த பவர், தற்போது பரவலாக பல படங்களில் நடித்து வருகிறார். ஆனபோதும் எந்த படத்திலும் அவர் சந்தானம், சூரியைப்போன்று படம் முழுக்க ஹீரோக்களுடன் வந்து காமெடி செய்யும் ஷோலோ காமெடியனாக நடிக்கவில்லை நடிக்கிற படங்களில் எல்லாம் அவரை ஒரு மூன்றாம்தட்டு காமெடியனாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் பவரோ, தானும் ஷோலோ காமெடியனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் சில இளவட்ட ஹீரோக்களிடம் தனக்கு சான்ஸ் கேட்டு வரும் சீனிவாசன், அதற்காக தனது வயதை குறைத்துக்காட்டவதற்காக எடை மற்றும் ஹேர் ஸ்டைல் கெட்டப்பையும் மாற்ற தயாராகிக்கொண்டிருக்கிறார்.

மேலும், அப்படி தனக்கு சான்ஸ் தரும்போது அந்த படங்களில் தனக்கான சம்பளத்தை அதிரடியாக குறைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். பவர்ஸ்டாரின் இந்த அதிரடி அறிவிப்பு சில தயாரிப்பாளர்களை அவர் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது.


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions