பவர் ஸ்டாரை நக்கலடித்த விஜய் அப்பா

Bookmark and Share

பவர் ஸ்டாரை நக்கலடித்த விஜய் அப்பா

புதுமுக நடிகர் ராஜா, காஷ்மீரா, பவர் ஸ்டார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘சுட்ட பழம் சுடாத பழம்‘. சிவா.ஜி இயக்குகிறார். கார்த்திக் ஆச்சார்யா இசை அமைக்கிறார். ஆர்.சிவன், ஆர்.செல்வன் தயாரிக்கின்றனர்.

இதன் ஆடியோ-டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது:திரையுலகினர் அனை வருக்கும் சினிமாதான் மதம், ஜாதி எல்லாம். பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற வித்தியாசம் இல்லாமல் நல்ல படமாக இருந்தால்தான் ஓடுகிறது. பல கோடி செலவில் தயாரித்த படம் ஓடாமல் போய்விடுகிறது. 1 கோடி, ஒன்றரை கோடி செலவில் தயாரித்த படம் நன்றாக ஓடுகிறது. இந்நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் கலந்துகொண்டிருக்கிறார்.

 அவர் அருகில் உட்கார்ந்திருந்ததால் எனக்கு கூடுதல் பவர் கிடைத்துவிட்டது. வழக்கமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது விசில் பறக்கும், கைதட்டல் கிடைக்கும். இதற்காக தனியாக ஆட்களை செட் செய்துகொண்டு வருகிறார். இந்த விழாவில் ஒன்றிரண்டுபேர்தான் விசில் அடித்தார்கள். 'ஆட்களை அழைத்து வரவில்லையா' என்று கேட்டேன். 'இது எனக்கு கிடைத்த நிஜ விசில்' என்றார்.

இப்படத்தில் ஒரு பாடலும் அவர் பாடி இருக்கிறார். சுதி சுத்தமாக பாடியது பற்றி கேட்டபோது அவர் ‘சுதி' ஏற்றிக்கொண்டு பாடியதாக பட குழுவினர் தெரிவித்தனர்.இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

இவரைப்போலவே விழாவுக்கு வந்திருந்த ஜாக்குவார் தங்கமும் பவர் ஸ்டாரை நக்கலடித்து பேசியதால் அவர் இருக்கையில் அமர்ந்தபடி நெளிந்துக்கொண்டிருந்தார்.


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions