எம்.ஜி.ஆருடன் நெருக்கமான பவர் ஸ்டார்

Bookmark and Share

எம்.ஜி.ஆருடன் நெருக்கமான பவர் ஸ்டார்

பவர் ஸ்டார் சீனிவாசன், தமிழ் சினிமாவில் எவ்வளவு வேகமாக பிரபலமானாரோ, அதே வேகத்தில் திடீரென காணாமல் போனார். ஆரம்ப கட்டத்தில் நிறைய படங்களில் கமிட் ஆனவர், தற்போது கைவசம் ஒருசில படங்களே வைத்துள்ளார். 

அந்த வரிசையில் தற்போது ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்து வருகிறார். சிங்கமுத்து, சென்ராயன், நைனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இப்போஸ்டர்களில் பவர் ஸ்டார் சீனிவாசன், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகியோருடன் நெருக்கமாக இருப்பது போன்று இருக்கிறது. 

பவர் ஸ்டாருக்கு எம்.ஜி.ஆர். முத்தம் கொடுப்பதுபோலவும், எம்.ஜி.ஆர், பவர் ஸ்டார் கையை பிடித்துக் கொண்டு இருப்பதுபோலவும், அண்ணாவுக்கு நெருக்கமாக அமர்ந்து பவர் ஸ்டார் பேசிக்கொண்டு இருப்பதுபோலவும் இப்படத்தின் போஸ்டர்களை வடிவமைத்துள்ளனர். இப்போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. 

இப்படத்தை திரைவண்ணன் இயக்கியுள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடிக் கொடுத்துள்ளார். இப்பாடல்களை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. வருகிற மார்ச் 24-ந் தேதி படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளனர்.


Post your comment





Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions