கொடுத்ததை திருப்பிக் கேட்கும் பவர்ஸ்டார்!

Bookmark and Share

கொடுத்ததை திருப்பிக் கேட்கும் பவர்ஸ்டார்!

லத்திகா படத்தில் ஹீரோவாக நடித்து அந்த படத்தையும் தயாரித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அதோடு அந்த சமயத்தில் தன்னை நடிக்க வைத்த கம்பெனிகளுக்கு தனது சார்பில் இருந்து பணம் கொடுத்துதான் நடித்தார் அவர்.

அந்த வகையில் சில கோடிகளை வாரி இறைத்த பவர்ஸ்டார், தன்னைப்பற்றிய பப்ளிசிட்டிகளையும் பெரிய அளவில் செய்து வந்தார். ஆனால் தற்போது தனக்கென்று ஒரு மார்க்கெட்டை பிடித்து விட்டார்.

அதனால் முன்பு மாதிரி பப்ளிசிட்டிகள் செய்வதை நிறுத்தி விட்ட அவர், பணம் கொடுத்து நடிப்பதையும் சுத்தமாக நிறுத்தி விட்டார். மாறாக, முன்னணி காமெடியன்களுக்கு இணையாக தனது சம்பளத்தை உயர்த்தி விட்டுள்ளார் பவர்ஸ்டார்.

அதேசமயம், தன்னிடம் முன்பு பணம் வாங்கிக்கொண்டு நடிக்க வைத்த தயாரிப்பாளர்கள் மீண்டும் தன்னிடம் கால்சீட் கேட்டு வந்தால், அவர்கள் தனக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் பேசினால், இவர் இரண்டு லட்சமாக தர வேண்டும் என்கிறார்.

காரணம், ஏற்கனவே உங்களுக்கு நான் நிறைய பணம் தந்திருக்கிறேன். அந்த பணத்தைதான் இப்போது திருப்பிக் கேட்கிறேன் என்கிறாராம். அதனால் பவர்ஸ்டாரிடம் பணம் வாங்கிக்கொண்டு நடிக்க வைத்தவர்கள், இப்போது அவரிடம் கால்சீட் கேட்கவே பயந்து கிடக்கிறார்கள்.


Post your comment





Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions