பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்!

Bookmark and Share

பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்!

தென்னிந்திய சினிமாவில் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படுவர் டாக்டர் சீனிவாசன். இவர் நடித்து வெளிவந்த ‘லத்திகா’ படம் தென்னிந்திய சினிமா பிரமுகர்களை ஒரு கணம் திரும்பி பார்க்க வைத்தது. இதைத் தொடர்ந்து சந்தானத்துடன் இவர் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அதைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் காமெடி வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் ‘ஐ’ படத்திலேயே இவருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றால் இவரது மார்க்கெட் எந்தளவுக்கு உயர்ந்து இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இப்படியாக தமிழ் சினிமாவில் காமெடியில் தனி முத்திரை பதித்து வந்த பவர் ஸ்டார் சீனிவாசன், ஒருகட்டத்தில் ஒருசில பிரச்சினைகளால் தமிழ் சினிமாவின் வாய்ப்புகளை இழந்து தவித்தார்.

இந்நிலையில், நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களுக்கு பிடித்தமான கட்சிகளில் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வேளையில், பவர் ஸ்டார் சீனிவாசன் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு, அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளார்.

இதற்காக இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions