பவர்ஸ்டாருக்கு கைதட்டல் குறைந்தது!

Bookmark and Share

பவர்ஸ்டாருக்கு கைதட்டல் குறைந்தது!

பவர்ஸ்டார் சீனிவாசன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார் என்றாலே அவர் சார்பாக ஒருகூட்டம் அந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆங்காங்கே உட்கார்ந்திருப்பார்கள்.

அதையடுத்து அவர் என்ட்ரி கொடுத்ததும் விடாமல் கைதட்டிக்கொண்டேயிருப்பார்கள். பின்னர், மேடையில் ஏறி சீட்டில் அவர் உட்கார்ந்த பிறகு நிறுத்துங்கள் என்று மெல்லமாக கையசைத்த பிறகுதான் அவர்கள் தட்டிய கையை நிறுத்துவார்கள்.

அப்படி பவருக்கு கிடைக்கிற கைதட்டலை பலர் தானாக கிடைத்தது என்று நினைத்துக்கொண்டாலும் சிலருக்கு அவரே ஆட்களை வைத்துதான் கைதட்டல் வாங்குகிறார் என்கிற சமாச்சாரம் தெரியும்.

அதனால் சந்தானம் உள்ளிட்டோர் நான் என்ன பவர்ஸ்டாரா ஆள் வச்சு கைதட்டல் வாங்குவதற்கு? என்று மேடையில் அவர் எதிரிலேயே சொல்லி அவர் தர்மசங்கடத்தில் தள்ளியிருக்கிறார்கள்.

ஆனால் சமீபகாலமாக பலரும் இதை ரிபீட் செய்து வருவதால், இந்த வெட்டி பப்ளிசிட்டியெல்லாம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் பவர். அதனால் ரசிகர்கள் என்ற பெயரில் ஆள்திரட்டி வரும் வேலையை இப்போது நிறுத்தி விட்டார்.

அதனால் இப்போது பவர்ஸ்டார் எந்த சினிமா விழாக்களுக்கு வந்தாலும் அவருக்கு முன்பு போன்று கைதட்டல் கிடைப்பதில்லை. அதன்காரணமாக அவர் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை.

ஆனால் இந்த நிலையை அவரை கலாய்த்து வரும் நடிகர்களுக்கு தெரியவர, என்ன அண்ணே இப்பல்லாம் ஆள் திரட்டிக்கொண்டு போறதை நிறுத்திட்டீங்க போல இருக்கு? என்று அவருக்கு போன் போட்டு கேட்டு டென்சன் செய்கிறார்களாம். 


Post your comment





Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions