மேடையில் பேசுவதை குறைத்த பவர்ஸ்டார்!

Bookmark and Share

மேடையில் பேசுவதை குறைத்த பவர்ஸ்டார்!

சில மாதங்களுக்கு முன்பு வரை பெரும்பாலான ஆடியோ விழாக்களில் தலைகாட்டி வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன். அப்படி அவர் எந்த விழாக்களுக்கு சென்றாலும் ரசிகர்களின் பலத்த கைதட்டலையும் பெற்று வந்தார்.

ஆனால் ஒரு படத்தின் விழாவில், சில சின்ன பட தயாரிப்பாளர்கள் எங்களை படப்பிடிப்புக்கு அழைத்து சென்று நடிக்க வைப்பவர்கள், பின்னர் பேசியபடி சம்பளமே தருவதில்லை. அதனால் பணம் இருக்கும் தயாரிப்பாளர்களை மட்டுமே படமெடுக்க அனுமதி கொடுங்கள் என்று அந்த விழாவுக்கு வந்திருந்த தயாரிப்பு சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அதையடுத்து அவர் தயாரிப்பாளர்களை மட்டமாக பேசுவதாக சொல்லி அவருக்கு எதிராக சிலர் அதே மேடையில் முழக்கமிட்டனர். குறிப்பாக, பவர்ஸ்டார் தயாரிப்பாளர்களை தவறாக பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு மாதிரியான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் எச்சரித்தனர்.

விளைவு, அதையடுத்து அமைதியாகி விட்ட பவர்ஸ்டார், பின்னர் அதிகப்படியாக ஆடியோ விழாக்களுக்கு வருவதை குறைத்து விட்டார். அப்படியே வந்தாலும், சினிமா பிரச்சினைகளைப்பற்றி எதையும் பேசுவதில்லை. சம்பந்தப்பட்ட படங்களை வாழ்த்தி பேசி விட்டு அமர்ந்து விடுகிறார்.


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions