தயாரிப்பாளர்களை மட்டமாக பேசுவதா? பவர்ஸ்டாருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சிங்கம்புலி - சிவா!!

Bookmark and Share

தயாரிப்பாளர்களை மட்டமாக பேசுவதா? பவர்ஸ்டாருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சிங்கம்புலி - சிவா!!

ராயல் ஸ்கிரீன்ஸ் சார்பில் பரமராஜ் தயாரித்துள்ள படம் தொப்பி. இந்த படத்தை மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய யுரேகா இயக்கியுள்ளார். முரளிராம்-ரக்ஷா, ஜி.எம்.குமார், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதியம் 12 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், டைரக்டர்கள் ஜி.என்.ரங்கராஜன், எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் விஜயசேதுபதி, விமல், சிங்கம்புலி, பவர்ஸ்டார் சீனிவாசன், தேனப்பன், அம்மா கிரியேசன்ஸ் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பவர்ஸ்டார் பேசியபோது,

நான்தான் பலருக்கு செக் மோசடி செய்திருக்கிறேன். ஆனால் இந்த சினிமாவில் எனக்கே செக் மோசடி செய்கிறார்கள். படப்பிடிப்புக்கு அழைத்து சென்று ரோப்பில் தொங்க விட்டு நடிக்க வைக்கிறார்கள். நானும் வியர்வை சிந்தி கடினமாக உழைக்கிறேன். ஆனால் நடித்து முடித்ததும் ஒரு செக் தருகிறார்கள். அதை வங்கியில் போட்டால் ரிட்டனாகி விடுகிறது. ஆக, செக் மோசடியான எனக்கே மோசடி செய்கிறார்கள்.

நான் பலரது தலையில் தொப்பி வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே திருந்தலாம் என்று நினைத்தாலும் என்னை திருந்த விட மாட்டார்கள் போலிருக்கு. நானெல்லாம் பதிலுக்கு தொப்பி வைக்க நினைத்தால் யாருமே தாங்க மாட்டார்கள் என்று கிண்டலாக பேசினார்.

அதையடுத்து, சினிமாவில் படம் தயாரிக்க வருபவர்களை முதலில் மொத்த பணத்தையும் வங்கியில் போடச்சொல்லி அதன்பிறகு படப்பிடிப்பை நடத்த அனுமதி கொடுங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த தேனப்பன், சிவா ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்தார் பவர்ஸ்டார். ஆக, மொத்தம் பணம் இருந்தால் மட்டுமே சினிமாவில் எதையும் சாதிக்க முடியும். திறமை, நம்பிக்கை எல்லாமே வேஸ்ட் என்பது போல் அவரது பேச்சு இருந்தது.

இதைக்கேட்ட டைரக்டரும், நடிகருமான சிங்கம்புலி கொதித்தெழுந்து விட்டார். அதையடுத்து பேச வந்த அவர்,

இந்த சினிமாவில் வெறும் பணத்தை மட்டுமே வைத்து யாருமே சாதிக்க முடியாது. இங்கே நம்பிக்கை, உழைப்பை மட்டுமே கொண்டு வந்து உயர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். வெறும் பணத்தை மட்டுமே வைத்து யாருமே சாதித்ததில்லை. சாதிக்கவும் முடியாது என்று உருக்கமாக பேசினார்.

ஆனால், அதையடுத்து பேசிய அம்மா கிரியேசன்ஸ் சிவா,

இன்றைக்கு படம் தயாரிப்பவர்கள் ஒவ்வொருவரும் படத்தை எடுத்து முடிப்பதோடு அதை தியேட்டருக்கு கொண்டு வருவதற்கு ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும் அனைவருக்கும் சம்பளம் கொடுப்பதற்கு அவர் எங்கெங்கெல்லாம் இருந்து வட்டிக்கு கடன் வாங்கி வருகிறார்கள் என்பது படம் தயாரித்தவர்களுக்குத்தான் தெரியும்.

ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரும் போய் விடுவார்கள். ஆனால் தயாரிப்பாளர் அந்த படத்தை வெளியிட அடுத்து போராடுகிறார்.

படம் வெளியாகி ஓடினால்தான் அவர் செலவு செய்த பணம் கைக்கு வரும்.இன்றைக்கு சினிமாவில் டாக்டர் சீனிவாசன் பவர்ஸ்டார் என்று ஆகியிருக்கிறார் என்றால் அதற்கு தயாரிப்பாளர்கள்தான் காரணம்.

தனது வளர்ச்சிக்கு காரணமானவர்களை மறந்து விட்டு இந்த பவர்ஸ்டார் இதுபோன்று தயாரிப்பாளர்களை மட்டம் தட்டி பேசுவதை இந்த மேடையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் பேசினார்.

அதையடுத்து கப்சிப்பாகி விட்டார் பவர்ஸ்டார். 


Post your comment





Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!
முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
அவங்கள விட்டுடுங்க ப்ளீஸ்- இப்படி தனுஷ் யாரை கூறினார் தெரியுமா?
தனுஷ்க்கு குவியும் வாழ்த்துக்கள்! எதற்கு தெரியுமா
தனுஷ் படத்திற்கு என்ன சர்டிபிக்கேட் தெரியுமா? டிடி மகிழ்ச்சி
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions