மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் பவர்ஸ்டார்!

Bookmark and Share

மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் பவர்ஸ்டார்!

லத்திகா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தபடிதான் என்ட்ரி கொடுத்தார் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி ஒர்க்அவுட்டானதை அடுத்து, தான் காமெடியன்தான் ஹீரோ அல்ல என்பதை புரிந்து கொண்ட அவர் பின்னர் தொடர் காமெடியனாகி விட்டார்.

சந்தானம் தனது டீமில் இருந்து அவரை கழட்டி விட்ட பிறகும்கூட பல படங்களில் காமெடியனாக நடித்தார். முக்கியமாக ஷங்கரின் ஐ படத்தில் அவரது காமெடி பெரிய அளவில் பேச வைத்தது. தற்போதைய நிலவரப்படி அரை டஜன் படங்களுக்கும் மேல் காமெடியனாக நடித்து வருகிறார் பவர்.

இந்த நிலையில், தற்போது ராமகிருஷ்ணன் நடிக்கும் ஒரு படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக பவர்ஸ்டாரும் நடிக்கிறார். முழுநீள காமெடி கதையில் உருவாக்கும் அந்த படத்திற்கு, ஆப்ட்டான் சாப்ட்டான் பப்ளிக் பிரைவேட் லிமிடெட் என்று டைட்டீல் வைத்துள்ளனர்.

இந்த படத்திற்கு 40 நாட்களுக்கு மேல் கால்சீட் கொடுத்து நடிக்கும் பவருக்கு, ஏகப்பட்ட பில்டப் காட்சிகள் உள்ளதாம். ஆக, வடிவேலு, விவேக், சந்தானத்தைத் தொடர்ந்து காமெடியன் பவர்ஸ்டாரும் ஹீரோவாகியிருக்கிறார்.


Post your comment





Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions