பவர்ஸ்டாரின் காமெடி இலாகா

Bookmark and Share

பவர்ஸ்டாரின் காமெடி இலாகா

சந்தானம், சூரி போன்ற காமெடியன்கள் பவர்ஸ்டார் சீனிவாசனை தங்களுடன் வைத்துக்கொள்ளவே பயப்படுகிறார்கள். காரணம், அவர்கள் நடிக்கிற காட்சிகளில் இவர் தலைகாட்டினால் மொத்த கைதட்டலும் இவருக்குத்தான் போய் சேருகிறதாம். அதனால் இப்போது இவர் பக்கத்தில் இருந்தால் நமக்குத்தான் ஆபத்து என்று எந்த காமெடியன்களும் பவரை கண்டு கொள்வதில்லை.

அதனால் நானும் ஷோலோ காமெடியனாகிக் காட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஐ படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

அதில் சில படங்கள் வெளியானபோதும், சிலல படங்கள் இன்னும் வெளியாகவில்லை.அந்தவகையில், மகுடி படத்தில் ஜானி படத்தில் ரஜினி நடித்தது போன்று சலூன் கடைக்காரராக நடித்திருக்கும் பவர்ஸ்டார், தற்போது சாரல் என்ற படத்தில் அதிரடியான காமெடியனாக உருவெடுத்திருக்கிறாராம்.

அசார், கங்காரு பிரியங்கா நடிக்கும் இந்த படத்தில் பவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ள தாம்.

அதனால் தன்னுடன் சில இளவட்ட காமெடியன்களையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு காமெடி காட்சிகளை விழுந்து விழுந்து சிரிக்கிற அளவுக்கு ரெடி பண்ணி நடித்திருக்கிறாராம் பவர்ஸ்டார்.

அதோடு, சந்தானம், சூரி போன்ற காமெடியன்கள் பஞ்ச் டயலாக் எழுதுவதற்கென்றே ஒரு டீம் வைத்திருப்பதைப்போன்று விரைவில் பவரும் ஒரு காமெடி இலாகாவை உருவாக்கப்போகிறாராம். 

 


Post your comment





Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
அவங்கள விட்டுடுங்க ப்ளீஸ்- இப்படி தனுஷ் யாரை கூறினார் தெரியுமா?
தனுஷ்க்கு குவியும் வாழ்த்துக்கள்! எதற்கு தெரியுமா
தனுஷ் படத்திற்கு என்ன சர்டிபிக்கேட் தெரியுமா? டிடி மகிழ்ச்சி
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்
அப்பாவைப் போல என்னை மீண்டும் கதாநாயகனாக்கிய என் மருமகன் தனுஷ்! - ராஜ்கிரண் நெகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions