தமிழ் மாநில கட்சியில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இணைந்தார்

Bookmark and Share

தமிழ் மாநில கட்சியில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இணைந்தார்

சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தொடங்கிய தமிழ் மாநில கட்சியின் 2–ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை ஏ.இ.கோவில் தெருவில் நேற்றிரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தமிழ் மாநில கட்சியில் இணைவதாக அறிவித்தார். அவருக்கு கட்சி நிறுவனர் ஆர்.சி.பால்கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கூட்டத்தில் இளங்கோவன் பேசும்போது கூறியதாவது:–

ஆர்.சி.பால்கனகராஜ் ஆரம்பித்த தமிழ் மாநில கட்சியில் சட்டத்துறையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்களும் சேர்ந்திருப்பதை இங்கு காணமுடிகிறது. ஊழலை ஒழிக்க முன்னெடுத்து நடத்தும் இவர்களது போராட்டத்துக்கு காங்கிரசின் ஆதரவு நிச்சயம் உண்டு என்றார். தமிழ் மாநில கட்சியின் தேர்தல் சின்னமாக ‘சங்கு’ சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக கட்சி நிறுவனர் ஆர்.சி.பால்கனகராஜ் அறிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

2–ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் மாநில கட்சி இன்று எழுச்சியுடன் வீறுநடை போடுகிறது. ஏராளமான இளைஞர்கள் படித்தவர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாட்டில் ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் முன்னேற வேண்டும். மக்களுக்கு அரசு இலவசங்களை தருவதை நிறுத்தி விட்டு கல்வியை இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.

ஊழலை ஒழிக்க கொண்டுவரப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும். 67–ம் ஆண்டு முதல் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஊழலை ஒழிக்க மிகப்பெரிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். இதற்கு தமிழ் மாநில கட்சி பாடுபடும்.

இவ்வாறு பால்கனகராஜ் பேசினார்.

கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், தமிழ் மாநில கட்சியின் பொதுச் செயலாளர் செங்குட்டுவன், பொருளாளர் காசிராமலிங்கம், மாநில அமைப்பாளர் துரைசிங்கம், மாநில இணை அமைப்பாளர் கொளத்தூர் ஜி.பழனி, தலைமை நிலைய செயலாளர் ஆர்.கே.ரமேஷ், மாநில துணை பொதுச் செயலாளர்கள் இ.நிக்சன், விஜயராமன், ஜி.கே.ராஜ், செல்வமுருகன். வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மோட்சம், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் டி.பிரேம்குமார், தென் சென்னை மாவட்ட அவைத் தலைவர் தி.நகர் யமஹா சுரேஷ், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.சிராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.அருண், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தங்க சாந்தகுமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.குமார், நகர செயலாளர்கள் எஸ்.ரவி, குமாரராஜா, விநாயக மூர்த்தி, பார்த்தீபன், சுரேஷ். மாநில கொள்கை பரப்பு செயலாளர் மூர்த்தியார், மகளிரணி இணை செயலாளர் நதியா சீனிவாசன், துணை செயலாளர் சொப்னா, இளமதி, செல்சுதாகர், டி.ஆர்.பிரபாகரன், பிரகாஷ், முரளி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Post your comment

Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions