பிரபாகரன் பிறந்த மண்ணில் எம்.ஜி.ஆர் க்கு புதிய சிலை

Bookmark and Share

பிரபாகரன் பிறந்த மண்ணில் எம்.ஜி.ஆர் க்கு புதிய சிலை

தமிழர்களுக்கு உலக முகவரி தந்த உலக தமிழர்களின் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த மண் வல்வெட்டித்துறையில் இன்று அ.தி.மு.க., நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த எம்.ஜி.ஆர். இன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் க்கு  புதிய சிலை இன்று திறக்கப்படவுள்ளது.

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.  தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே.  

இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார்.  அதன் பின்பு பிரபாகரனுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எவ்வளவோ உதவிகள் புரிந்தார். 

ஒரு முதல்வராக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செய்த பேருதவி, வெளிப்படுத்திய கொள்கை உறுதி ஆகியன ஈழத்  தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு பிரிக்க முடியாத பக்கங்களாகவே இருக்கும் என்பதையே நன்றி மறவாத ஈழ தமிழ் மக்களின் இந்த செயல் வெளிப்படுத்தி நிற்கின்றது.

 

 


Post your comment





Related News
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
படமாகும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை.!
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!
என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியாது: ரஜினிக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குனர்
இந்த வயதில் திருமணம் செய்துக்கொண்டது இதற்காக தான்- வேலு பிரபாகரன் அதிரடி விளக்கம்
ஆரம்பத்திலிருந்து தன் மீது முழு நம்பிக்கை வைத்தவர் விஜய் சேதுபதி : ஜஸ்டின் பிரபாகரன் பேட்டி
அண்ணனின் பேட்மிண்டன் அணிக்கு விளம்பர தூதராகிய சண்முக பாண்டியன்
தமிழில் திக்கித் திணறிய விஜயகாந்த் மகன்!
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் கொலை சினிமாவாகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions