தெலுங்கு சினிமாவின் டார்லிங் பிரபாஸ்!

Bookmark and Share

தெலுங்கு சினிமாவின் டார்லிங் பிரபாஸ்!

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களில் பிரபாசும் ஒருவர். 1979ல் சென்னையில் பிறந்தவர் இவர். சிறுவயதிலேயே ஆந்திரா சென்று விட்ட பிரபாஸ், 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

அதையடுத்து, வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களாக நடித்து வந்தவர் கடந்த 13 ஆண்டுகளில் இதுவரை 19 படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் நடித்திருக்கும் பாகுபலி படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு மைல்கல் படமாகும்.

இந்த படத்திற்காக தனது உடல்கட்டை வலுவாக மாற்றி நடித்திருப்பவர், படம் முடிகிற வரைக்கும் 3 ஆண்டுகளாக அதே உடல்கட்டை பராமரித்தும் வந்திருக்கிறார். அதோடு, இந்த பாகுபலி படம் வெளியாகும்போது தெலுங்கு சினிமாவின் முதல்தர நடிகராகி விடுவார் டார்லிங் நடிகர் என்று ஆந்திர படஉலகமே அவர் புகழ்பாடி வருகிறது.

மேலும், தெலுங்கு சினிமாவில் டார்லிங் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வரும் பிரபாஸை, ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் டார்லிங் என்றுதான் உரிமையோடு அழைக்கிறார்களாம். அந்த அளவுக்கு அனைவருக்குமே பிடித்தமான நடிகராக இருக்கிறாராம் பிரபாஸ்.


Post your comment





Related News
ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions