பாகுபலி படத்திற்கு தேசிய விருது எதிர்பார்க்கும் பிரபாஸ்

Bookmark and Share

பாகுபலி படத்திற்கு தேசிய விருது எதிர்பார்க்கும் பிரபாஸ்

தெலுங்கு திரை உலகின் ரிபெல் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தில் அவருடன் நடிகைகள் அனுஷ்கா, தமன்னா,ரம்யா கிருஷ்ணன், ரோகினி மற்றும் நடிகர்கள் சத்யராஜ்,நாசர்,ரானா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கி வருகின்றார். தற்போது இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

இப்படம் குறித்து நடிகர் பிரபாஸ் கூறுகையில் இப்படத்தினை பிரமாண்டம் குறையாமல் திரையில் காட்டவிருக்கும்  விஷுவல் எபெக்ட் மற்றும் சாபு குழுவினருக்கு இந்திய தேசிய விருது கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு,தமிழ்,இந்தி,மலையாளம் என பல மொழிகளில் தயாராகி வரும் பாகுபலி படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions