பாகுபலி படத்தின் டீசர் வெளியீடு

Bookmark and Share

பாகுபலி படத்தின் டீசர் வெளியீடு

டோலிவுட்டில் ஆண்டுகளாக தயாராகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் டீசர் நேற்று இரவு வெளிவந்துள்ளது. இன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத படக்குழுவினர் இப்படத்தின் டீசரை  நேற்று இரவு வெளியிட்டுள்ளனர்.

இந்திய ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும்  பாகுபலி படத்தை இயக்குநர் ராஜமௌலி பெரும் சிரத்தையோடு இயக்கி வருகின்றார்.  

பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் இப்படத்தில்  நடிக்கின்றனர். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார்


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions