இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலாவுடன் பிரபாஸ் கூட்டணி

Bookmark and Share

இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலாவுடன் பிரபாஸ் கூட்டணி

டோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீனு வைட்டாலா தற்போது ராம் சரண் நாயகனாக நடிக்கும் புரூஸ் லீ படத்தை இயக்கி வருகின்றார். அதன் பின்னர் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை ஸ்ரீனு இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக பிரபாஸ் நடித்து வந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படம்  ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிரபாஸ் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இயக்குநர் சுர்ஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க ஒத்துக் கொண்ட படம் இன்னும் ஆரம்பிக்கப்படாததால் இயக்குநர் ஸ்ரீனு இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க பிரபாஸ் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ராம் சரண் நடிக்கும்  புரூஸ் லீ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் அப்படத்தை முடித்து விட்டு ஸ்ரீனு பிரபாஸ் படத்தின் பணிகளை துவங்குவார் என தெரிகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions