டிசம்பரில் யங் ரிபல் ஸ்டாருக்கு டும்,டும்,டும்....

Bookmark and Share

டிசம்பரில் யங் ரிபல் ஸ்டாருக்கு டும்,டும்,டும்....

யங் ரிபல் ஸ்டார் பிரபாசுக்கு வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டோலிவுட்டின் 'தி மோஸ்ட் எல்ஜிபில் பேச்சலர்' என்ற பெயருக்கு உரியவரான பிரபாஸ் திருமணம் பற்றி அதிகம் பேசாமல் இருந்து வந்தார்.

அவர் தற்போது மிகப்பிரம்மாண்டமான சரித்திர காவியமான பாகுபலியில் நடித்து வருகிறார். இந்த படம் அவரது வாழ்க்கையிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையாகாது. பாகுபலியின் இரண்டு பாகங்களையும் முடித்த பிறகு அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.

பாகுபலி முதல் பாகம் முடிந்து விட்டநிலையில், இரண்டாம் பாகமும் சுமார் 70 சதவீதம் முடிந்து விட்டது என்று இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி கூறியுள்ளார். அவர் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறாராம்.

இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் இருக்கின்றனராம். பாகுபலியின் ஆடியோ வரும் ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
பிரபாஸை கிண்டல் செய்த ராம் கோபால் வர்மா
4 வருடம் கழித்து அடுத்த படத்தை தொடங்கும் பிரபாஸ்
இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத விஷயம் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடந்துள்ளது
பாகுபலி நாயகனுடன் இணையும் எமி ஜாக்சன்!
ஜூன் 1ம் தேதி பாகுபலி ஆடியோ ரிலீஸ்
போலிஸ் கேரக்டரில் நடிக்க ஆசை : பிரபாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions