ஜூன் 1ம் தேதி பாகுபலி ஆடியோ ரிலீஸ்

Bookmark and Share

ஜூன் 1ம் தேதி பாகுபலி ஆடியோ ரிலீஸ்

மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரம்மாண்ட வரலாற்று காவியமான பாகுபலியின் ஆடியோ வரும் ஜூன் 1 ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது.

முன்னதாக மே 31ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போனது. அதற்கு அந்த படக்குழுவினர் மன்னிப்பு கேட்டது நினைவிருக்கலாம். பாகுபலியின் ஆடியோ ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றம் கண்டு வருகின்றது.

இந்நிலையில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 1ம் தேதி ரிலீஸ் ஆகின்றது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதிலும் மாற்றம் வருமா என்ற சந்தேகம் டோலிவுட் வட்டாரங்களில் இருந்து வருகின்றது.

இந்த படத்தில் பிரபல ஹீரோவான டகுபதி ராணா, பிரபாசுக்கு சமமான எதிரியாக பல்லால தேவா என்ற வேடத்தில் நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.இதில் பிரபல நடிகைகள் அனுஷ்கா மற்றும் தமன்னா நடிக்கிறார்கள் .

முன்னாள் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணனும் ராஜமாத்தா என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர்களான பிரசாத் தேவினேனி மற்றும் ஷோபு யர்லாகத்தா ஆகியோர் இணைந்து ஆர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் தயாரித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions