தமிழில் நடிக்க வரும் பிரபுதேவா

Bookmark and Share

 தமிழில் நடிக்க வரும் பிரபுதேவா

ஹிந்தியில் தற்போது படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா விரைவில் தமிழ்ப் படங்களைத் தயாரிக்க உள்ளார் என்று சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்தப் படத்தில் பிரபுதேவாவே நாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

“கிரீடம், தாண்டவம், தெய்வத் திருமகள், தலைவா, சைவம், இது என்ன மாயம்” ஆகிய படங்களை இயக்கி உள்ள விஜய் இந்தப் படத்தை இயக்க உள்ளார். நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக இதை உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

பிரபுதேவா தற்போது அக்ஷய் குமார் நடிக்கும் சிங் இஸ் பிளிங் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழில் கடைசியாக அவர் நடித்த களவாடிய பொழுதுகள் படம் முடிவடைந்து சில ஆண்டுகள் ஆகியும் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இன்னும் வெளிவராமலே உள்ளது. பிரபுதேவா கடைசியாக கதாநாயகனாக நடித்து ஓரளவிற்கு வெற்றி பெற்ற படம் எங்கள் அண்ணா.

அந்தப் படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். தனி நாயகனாக நடித்த  அலாவுதீன் படம் 2003ம் ஆண்டு வெளிவந்து, தோல்வியடைந்தது. 2005ம் ஆண்டில் தெலுங்குப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 12 படங்களை இயக்கி விட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா திடீரென நடிக்க முடிவெடுத்திருப்பது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions