பிரபுதேவாவுக்கு குட்டி ராதிகா வலை

Bookmark and Share

பிரபுதேவாவுக்கு குட்டி ராதிகா வலை

இயற்கை. வர்ண ஜாலம், மீசை மாதவன் போன்ற படத்தில் நடித்தவர் குட்டி ராதிகா. ஒரு சில படங்களில் நடித்த பிறகு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்து நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

மீண்டும் நடிப்பு ஆசையுடன் தயாரிப்பாளர் ஆசையும் வந்தது. இரண்டையும் தற்போது நிறைவேற்றி வருகிறார். கன்னடத்தில் லக்கி, நன்னா ஜோடி ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.

அடுத்து ‘ஐ ஹேட் டேன்ஸ்’ படத்தை தயாரிக்கிறார்.ராதிகாவுக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அவரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

நவம்பர் மாதம் ராதிகாவின் பிறந்த நாள். அன்றைய தினம் இப்படத்துக்கான அறிவிப்பை வெளியிட எண்ணி உள்ளார். இதற்கிடையில் இப்படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் ஹீரோக்கள் சிலரிடம் அணுகி கால்ஷீட் கேட்க முடிவு செய்திருக்கிறார்.

அதில் பிரபுதேவாவும் ஒருவராம். இதற்கிடையில் ரகுராம் இயக்கத்தில் ‘நமகாகி’ படத்தில் விஜய் ராகவேந்திரா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்கும் ரகுராம்தான் ‘ஐ ஹேட் டேன்ஸ்’ படத்தையும் இயக்க உள்ளார். 

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions