பிரபு, மோகன்லால் இணைந்து நடிக்கும் புலிமுருகன்

Bookmark and Share

பிரபு, மோகன்லால் இணைந்து நடிக்கும் புலிமுருகன்

பிரபு மலையாள சினிமாவுக்கு புதியவர் கிடையாது. ஏற்கனவே மோகன்லாலுடன் கலாபாணி படத்தில் நடித்துள்ளார். தமிழில் இப்படம், சிறைச்சாலை என்ற பெயரில் வெளியானது. இது தவிர ஜெயராமுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு மோகன்லாலும், பிரபுவும் இணைந்து நடிக்கின்றனர். மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்துக்கு, புலிமுருகன் என பெயர் வைத்துள்ளனர். 

பிரபல ஸ்கிரிப்ட் ரைட்டர் உதயகிருஷ்ணா புலிமுருகனின் ஸ்கிரிப்டை எழுதியுள்ளார். சண்டைக் காட்சிகள் அதிகம் உள்ள திரைப்படம் என்று படம் குறித்து அவர் தெரிவித்துள்ளார். மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions