ஒரு மாதத்திற்கு ரயிலை வாடகைக்கு எடுக்கிறார் பிரபு சாலமன்

Bookmark and Share

ஒரு மாதத்திற்கு ரயிலை வாடகைக்கு எடுக்கிறார் பிரபு சாலமன்

கயல் படத்திற்கு பிறகு, பிரபு சாலமன் அடுத்த படத்திற்கான ஆயத்த பணிகளில் பிசியாக இருக்கிறார். அடுத்த படத்தின் முக்கிய ஹீரோ ரயில் தான். அடுத்துதான் தனுஷ் என்கிறார்கள்.

இந்தப் படம் இந்தியா முழுக்க ரயிலில் பயணிக்கும் கதை. இதற்காக பிரபுசாலமன் தன் உதவியாளர்களுடன் இந்தியா முழுவதும் ரயிலிலேயே சுற்றுப்பயணம் செய்து, கதை விவாதம் நடத்தியிருக்கிறார்.

இந்த பயணத்திலேயே எந்தெந்த ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்துவது எந்த இடங்களில் ரயில் பயணிப்பதை வெளியில் இருந்து படம் எடுப்பது என்பது உள்ளிட்ட அத்தனை பணிகளையும் திட்டமிட்டு முடித்திருக்கிறார்.

இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி பெற்றிருக்கிறார். ரயில் பயணத்தை இதுவரை யாரும் படம்பிடித்திராத வகையில் பிரமாண்ட விசுவல் ட்ரீட்டா கொடுக்க பிரபு சாலமன் முடிவு செய்திருக்கிறார்.

ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. மனித உணர்வுளின் சங்கமம் ரயில் பயணம். பல தலைவர்கள் போராடியும் கொண்டு வரமுடியாத சமத்துவத்தை கொண்டு வந்ததும் ரயில், கலவரங்களுக்கு பலியாவதும் ரயில்தான்.

இப்படி பல ரெயில் பற்றிய விஷங்கள் படத்தில் இடம்பெறுகிறதாம். படப்பிடிப்புகாக ஒரு ரயிலை ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுக்க தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் ஏற்பாடு செய்து வருகிறார்.

வாடகை மட்டும் பலகோடிகளை தாண்டுமாம். ரயிலோடு தொடர்புடைய டைட்டில் பற்றியும் தீவிரமாக யோசித்து வருகிறார் பிரபு சாலமன்.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions