பிரபு சாலமன் படத்தில் தெலுங்கு ஹீரோ!

Bookmark and Share

பிரபு சாலமன் படத்தில் தெலுங்கு ஹீரோ!

மைனா,கும்கி போன்ற தரமான படைப்புகளால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இயக்குநர் பிரபு சாலமன் கடைசியாக இயக்கிய கயல் படம் எதிர்பார்த்த அளவு வசூலில் வெற்றி பெறவில்லை இருப்பினும் இப்படத்தின் இசை மற்றும் கதாப்பாதிரங்களின் தேர்வும் நடிப்பும் என பல தரப்பில் பாராட்டுகளைப் பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரபு சாலமன் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

இப்படத்திற்கு பின்னர் இயக்குநர் பிரபு சாலமன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தில் டோலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நடிகர் கார்த்திக் ராஜு நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

திப்பு படத்தின் வாயிலாக தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கிய கார்த்திக் ராஜு தற்போது பல தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இவர் தற்போது டோலிவுட்டின் பெண் இயக்குநர் சன்யாவின் படத்தில் நடித்து வருக்கின்றார்.

இவர் இப்படத்தை முடித்ததும், பிரபு சாலமன் தனுஷ் படத்தை முடித்ததும் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என தெரிகின்றது.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions