பிரபுசாலமனின் டெக்னிக்!

Bookmark and Share

பிரபுசாலமனின் டெக்னிக்!

சமீபகாலமாக வாங்கிய படங்கள் வசூலை வாரிக்கொடுத்தால் சத்தமில்லாமல் இருக்கும் விநியோகஸ்தர்கள் படங்கள் நஷ்டத்தைக் கொடுத்தால் நஷ்டஈடு கேட்டு கொடி பிடித்து வருகிறார்கள்.

ரஜினி, கமல் போன்ற நடிகர்களிடம் நேரடியாகவே நஷ்டஈடு கேட்பவர்கள், மற்றவர்களின் படங்கள் நஷ்டத்தைக் கொடுத்தால் அதே நிறுவனமோ, டைரக்டரோ அதன்பிறகு வெளியிடும் படங்களை குறைந்த விலைக்கு வாங்கி தங்களது முந்தைய நஷ்டத்தை சரிகட்டிக்கொள்ள நினைக்கிறார்கள்.

அந்த வகையில், பிரபுசாலமன் இயக்கிய மைனா, கும்கி படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையே கொடுத்தது. ஆனால், கயல் பல ஏரியா விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது.

அதனால் மீண்டும் அவர் புதுமுகங்களை வைத்து படம் இயக்கினால் அந்த படத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள் விநியோகஸ்தர்கள்.அதனால்தான், கடைசி நேர சிக்கலை மனதில் கொண்டு, முன்கூட்டியே உஷாரான பிரபுசாலமன், மீண்டும் புதுமுகங்களை வைத்து இயக்கினால் பிரச்சினைதான் என்பதால், தற்போது மார்க்கெட் இருக்கும் தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறாராம்.

மேலும், கயலை வாங்கியவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தனுஷ் படம் சம்பாதித்துக்கொடுத்து விடும். அதனால் விநியோகஸ்தர்களுக்கிடையிலான சுமூக உறவு நீடிக்கும் என்பதே இதற்கு முக்கிய காரணமாம்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions