புதுமுக நாயகி தேடும் பிரபுசாலமன்!

Bookmark and Share

புதுமுக நாயகி தேடும் பிரபுசாலமன்!

பிரபுசாலமன் படங்களில் எப்போதுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில், மைனா, கும்கி, கயல் என அவரது சமீபத்திய படங்களில் நடித்த நடிகைகளுக்கு மார்க்கெட்டில் ஒரு வேல்யூவும் ஏற்பட்டது. அதாவது மைனாவுக்கு பிறகு அமலாபால் பெரிய நடிகையாகி விட்டார்.

அதேபோல், கும்கியில் நடித்த லட்சுமிமேனனும் பெரிய நடிகையானார். இப்போது கயல் படத்தில் நடித்த ஆனந்தியும் சில பெரிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால், அவரது புதிய படத்தில் நடிப்பதற்கு வளர்ந்து வரும் நடிகைகள் மத்தியில் பலத்த போட்டி ஏற்பட்டது.

ஆனால், பிரபுசாலமன் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று செய்தி வெளியிடப்பட்ட பிறகு அப்படியென்றால் முன்னணி நடிகைதான் கதாநாயகியாக நடிப்பார் என்று அவரிடம் சான்ஸ் கேட்க நினைத்த சில நடிகைகள் பேக் அடித்தனர்.

ஆனால், இப்போது பிரபுசாலமனோ, தனுஷ் கதாநாயகன் என்றாலும், அவருடன் நடிக்கப்போவதும் புதுமுக நடிகைதான் என்று சில புதுமுகங்களின் ஆல்பங்களை வரவைத்து தேர்வு செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

அதனால், கோலிவுட் மட்டுமின்றி கேரளா, ஐதராபாத், பெங்களூரில் இருந்தும் புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள் சான்ஸ் கேட்டு பிரபுசாலமனை முற்றுகையிட்டுள்ளனர். 


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions