அசாமில் பிரபுசாலமன் யூனிட்!

Bookmark and Share

அசாமில் பிரபுசாலமன் யூனிட்!

தனுஷ்-பிரபுசாலமன் இணையும் பெயரிடப்படாத படத்தின் வேலைகள் கடந்த சில மாதங்களாகவே துரிதமாக நடந்து வந்தது. அதாவது மொத்த படமும் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் நடப்பதால், அதற்காக ஒரு ரயிலை வாடகைக்கு பிடிப்பதோடு, அந்த ரயில் ஓடிக்கொண்டிருக்க ரயில் பாதையும் வேண்டும் என்பதால் வட இந்தியா சென்று அதற்கான சரியான வழித்தடங்களை தேடிப்பிடித்து வந்தனர்.

அப்படி தேடும் லொகேசன் மலைப்பிரதேசமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால், பல வட மாநிலங்களுக்கு சென்று லொகேசன் பார்த்தவர்களுக்கு அசாமில் பார்த்த ஏரியாக்கள் பிடித்து விட அங்கு தற்போது பிரபுசாலமனின் படக்குழு முகாமிட்டிருக்கிறது.

பாலாஜி மோகனின் மாரி, வேல்ராஜின் விஐபி-2 படப்பிடிப்பின் இறுதிகட்டத்தில் தனுஷ் இருந்தபோதே அசாமில் படப்பிடிப்பை தொடங்கி விட்டார் பிரபுசாலமன். முதல்கட்டமாக மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தவர், தற்போது தனுஷ்-கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறாராம்.

அதோடு, ஓடும் ரயிலில் நடக்கிற கதை என்பதால், நடிகர் நடிகைகள் ஓய்வெடுப்பதற்கு, மேக்கப் -காஸ்டியூம் போட்டுக்கொள்வதற்கென்று அனைத்து வசதிகளும் அந்த ரயிலிலேயே ரெடி பண்ணியிருக்கிறார்களாம்.

அதனால் படப்பிடிப்பு குழு பெரும்பாலும் ரயிலை விட்டு வெளியே வருவதற்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவுதானாம். ரயில் செல்வதை வெளியில் இருந்து படமாக்க மட்டுமே கேமரா டெக்னீசியன்கள் வெளியில் வருகிறார்களாம்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions